வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

உங்கள் வீட்ல பவர் கட்டா? அப்போ இந்த செய்தியைப் படிக்க வேண்டாம்

DIN | Published: 12th September 2018 12:53 PM


சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் என தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அரசு ஒப்பந்தங்களை, தனது நண்பர்கள், சகோதரர்களுக்கு வழங்கியதாக ஊழல் புகார் எழுந்த நிலையில்,  நகராட்சி, நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, என் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் நான் அமைச்சர் பதவி மட்டும் அல்ல கட்சிப் பதவிகளில் இருந்தும் விலகத் தயார். ஆர்.எஸ். பாரதியின் கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டியதில்லை. அதிமுகவில் பலர் இருக்கிறார்கள் அவருக்கு பதிலளிக்க என்று கூறினார்.

மின்வெட்டு குறித்து கேட்கப்பட்டதற்கு, தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் எங்குமே மின்வெட்டு இல்லை என்று பதிலளித்தார்.
 

Tags : velumani tamilnadu minister power cut power shutdown

More from the section

கஜா புயல் எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
அனிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தடை -  உயர் நீதிமன்றத்தில் அனிதாவின் தந்தை வழக்கு
கஜா புயல் 9 மணி அப்டேட்: நாகைக்கு தெற்கே கரையைக் கடக்கக்கூடும் என்று பாலச்சந்திரன் பேட்டி
கரையைத் தொட்டது கஜா புயலின் வெளிப்பகுதி: வானிலை ஆய்வு மையம்
புயலுக்கு பின் அல்ல நடுவிலும் ஒரு அமைதி வரும்: கஜா கரையைக் கடந்ததை கண்டுபிடிப்பது எப்படி?