16 டிசம்பர் 2018

கடலூர் சிறையில் பாரதிக்கு மரியாதை

DIN | Published: 12th September 2018 02:29 AM
கடலூர் மத்திய சிறையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்த சிறை அலுவலர் கோ.காந்தி.


பாரதியார் அடைக்கப்பட்டிருந்த கடலூர் கேப்பர்மலை மத்திய சிறை வளாகத்தில் அவரது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
சிறை வளாகத்தில் அமைந்துள்ள பாரதியார் உருவச் சிலைக்கு, சிறை அலுவலர் கோ.காந்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட பாரதியார், 1918-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் நினைவாக சிறை வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

More from the section

செந்தில்பாலாஜி அரசியல்வாதி அல்ல; ஒரு வியாபாரி: அமைச்சர் கருப்பணன் தாக்கு
கபாலீஸ்வர் கோயில் சிலை விவகாரம்: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது
ரஃபேல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தடுமாற்றம்: பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் 'பெய்ட்டி' புயல் 
கார்ப்ரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகளை தமிழ்நாடு அரசு தடை செய்யாதது ஏன்?: இரா.முத்தரசன் கேள்வி