புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

நீலகிரியில் குறிஞ்சி மலர்கள் சிறப்புக் கொண்டாட்டம் தொடக்கம்

DIN | Published: 12th September 2018 12:55 AM


நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், அதற்கான கொண்டாட்ட நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. 
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி வகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. 6 மாதங்களுக்கு ஒருமுறையிலிருந்து 12 வருடங்களுக்கு ஒருமுறை நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பூத்துக் குலுங்கும் இத்தகைய குறிஞ்சி மலர்களுக்காக நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தமிழக அரசின் சார்பிலும் சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. 
மாவட்டத்தில் முதல்முறையாக உதகை அருகிலுள்ள கல்லட்டி பகுதியில் நடைபெற்ற குறிஞ்சி விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் கோடை விழா, பழக் கண்காட்சி , மலர்க் காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனைத் திரவிய கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்க வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அழகும் சிறப்பும் மிக்க இந்த மாவட்டத்துக்கு மேலும் அழகு சேர்த்து பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம், கல்லட்டி, கீழ்கோத்தகிரி மலைப் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இப்பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்பதையும், இப்பூவின் சிறப்பையும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக முதல்முறையாக நிகழாண்டில் குறிஞ்சி விழா நடத்தப்படுகிறது என்றார்.
 

More from the section

திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயார்: டிடிவி தினகரன்
அழகிரி தனித்து போட்டியிட்டால் அதிமுகவுக்கு பின்விளைவு இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஆதார் எண்ணால் தனி மனித சுதந்திரம் பாதிக்கக்கூடாது: கமல்ஹாசன்
ஜெயலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லாதது ஏன்? பன்னீர்செல்வம் பகீர் குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து