வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

மழை பெய்யும் என்று வானிலை மையம் சொன்ன அந்த நாள் எப்போது வரும்?

DIN | Published: 12th September 2018 04:05 PM


சென்னை: சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதாவது 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்கள் முதல் கடற்கரையோர மாவட்டங்கள் வரை பரவலாக மழை பெய்யும் என்று கணித்து அறிவித்திருந்தது.

ஆனால், வானிலை ஆய்வு மையம் சொல்வதற்கு முன்பும் சரி, பின்பும் சரி சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக உள்ளது.

பல மாவட்டங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு நீடிக்கிறது. பகல் வேளையை விடுங்கள், காலை நேரமும் கடும் வெப்பமாக இருக்கிறது. கிட்டத்தட்ட கோடைக் காலம் போலத்தான் சூரியன் அதன் வேலையைப் பார்க்கிறது.

செப்டம்பர் 7ம் தேதி அதிகபட்சமாக பகல் நேரத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பம் அதிகரிக்கும் போதெல்லாம் வெப்பச் சலனத்தால் மழை பெய்யும் என்று மக்கள் மேகக் கூட்டங்களைப் பார்ப்பதும், அது டாடா சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்து செல்வதுமாக இருக்கிறது.

எனவே, 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சொன்ன அந்த நாட்கள் எப்போது வரும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, இன்று அதிகாலை ஒரு  மேகக் கூட்டம் கடற்கரையில் இருந்து சென்னை எல்லையைத் தொட்டது. ஆனால் அதற்குள் சூரியன் உதயமானதால் லேசான மழை வாய்ப்பு நமக்கு பறிபோனது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் மேகக் கூட்டங்கள் எப்போதுமே கடற்கரை மாவட்டங்களுக்கு சாதகமாக அமையாது. மேகக் கூட்டங்கள் மழையைத் தரும் அளவுக்கு மாறுவதற்கு சென்னை மக்கள் நிச்சயம் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டியது அவசியம். 

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2வது நாளாக நேற்றும் மழை பதிவாகியுள்ளது.
கோவில்பட்டி, தூத்துக்குடி - 8 செ.மீ.
திருப்புவனம், சிவங்கை - 7 செ.மீ.
அரவக்குறிச்சி, கரூர் - 5 செ.மீ என மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

More from the section

அமைச்சர் தங்கமணிக்கு ஒரு வாரம் கெடு விதித்த மு.க.ஸ்டாலின்
கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்
பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த திமுக வரலாறு குறித்து பேசலாமா?: தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி 
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது: வைகோ
நான் எதற்கும் பயந்து ஓடிப்போகிறவன் கிடையாது: கருணாஸ்