புதன்கிழமை 14 நவம்பர் 2018

ரூ. 80 கோடி சிலை கடத்தல் வழக்கு: கும்பகோணம் நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜர்

DIN | Published: 12th September 2018 01:41 AM


ரூ. 80 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேர் கும்பகோணம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை நீதிபதி வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் சௌந்தரியபுரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில், பையூர் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில், சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயில்களில் கடந்த 2015-ஆம் ஆண்டு சிவன்-பார்வதி சிலை, ஆதிகேசவ பெருமாள் சிலை, இரு பூதேவி சிலைகள், இரு ஸ்ரீதேவி சிலைகள், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சிலை, சக்கரத்தாழ்வார் ஆகிய ரூ. 80 கோடி மதிப்பிலான எட்டு ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது.
இச்சிலைகளை கடந்த 14.5.2015 அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் தனலிங்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் பிடித்து, தனலிங்கத்தை கைது செய்தனர். இதில் 15 பேருக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ள மாரீஸ்வரன், சண்முகம், ஜாய்சன் சாந்தகுமார், தமீம்பாட்ஷா, சபரிநாதன், தனலிங்கம், கோகுல்பிரகாஷ், திரைப்பட இயக்குநர் வி. சேகர், பார்த்திபன் ஆகியோரும், சிறையில் உள்ள ஜெயக்குமார், விஜயராகவன், முஸ்தபா உள்ளிட்ட 12 பேரும் கும்பகோணம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர். 
மேலும், வழக்கில் தொடர்புடைய ராஜசேகர், சண்முகநாதன், சுப்பிரமணியன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வரும் 25- ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

More from the section

மத்திய, மாநில அரசுகளை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்: கருணாநிதியின் நூறாவது நாள் நினைவையொட்டி தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
அரசியலுக்கு வராத ரஜினி குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு
மதுரையில் பிறந்த நாள் கொண்டாடிய ரௌடிகள்: நள்ளிரவில் போலீஸார்  அதிரடி சோதனையில் 10 பேர் சிக்கினர்
தேவர் குருபூஜை விழா: விதி மீறிய 86 வாகனங்கள் மீது வழக்கு