புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

7 பேரின் விடுதலை சட்டநுணுக்கம் சார்ந்தது: திமுக பொருளாளர் துரைமுருகன்

DIN | Published: 12th September 2018 01:38 AM


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை சட்டம் நுணுக்கம் சார்ந்தது என்பதால், அதில் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: ஊழல் புகார் கூறப்பட்டுள்ள அமைச்சர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார், வழக்கும் தொடுத்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தலைமையிலான அமைச்சரவையில் இருப்பதால் அவரை குற்றவாளி இல்லை என முதல்வர் கூறியுள்ளார் என்றார் அவர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல். அது சட்ட நுணுக்கம் சார்ந்தது என்பதால், அதில் என்னுடைய கருத்து தேவைப்படாது' என்றார்.
 

More from the section

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம்
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்
செய்திகளை தெரிந்து கொள்ளாவிடில் அரசியலில் இருந்து தூக்கி எறியப்படுவோம்: புதுவை முதல்வர் வே.நாராயணசாமி
ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்கும் வரை போராடுவோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்