சேலம் 8 வழிச்சாலை திட்டம் 6 வழிச்சாலையாக மாற்றம்?

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றம் உள்ளிட்ட பல மாற்றங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வரைவு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது. 
சேலம் 8 வழிச்சாலை திட்டம் 6 வழிச்சாலையாக மாற்றம்?

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றம் உள்ளிட்ட பல மாற்றங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வரைவு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது. 

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் குறித்து செய்தி வெளியானதில் இருந்தே அதற்கு ஏராளமாக எதிர்ப்புகள் கிளம்பியது. ஏராளமான மரங்கள் வெட்டப்படுகிறது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், வனப் பகுதிகள் கையகப்படுத்தப்படும் உள்ளிட்ட ஏராளமாக காரணங்களை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வந்தது. 

இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில், இந்த திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக மாற்றங்களை கொண்ட புதிய அறிக்கையை சமர்பித்துள்ளது. 

அதன்படி, இந்த திட்டம் முதல் கட்டமாக 8 வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையாக குறைக்கப்படுகிறது. வருங்காலத்தில் போக்குவரத்துத் தேவைக்கு ஏற்ப அது 8 வழிச்சாலையாக மாற்றப்படும். அதனால், இந்த திட்ட மதிப்பீடு ரூ.10,000 கோடியில் இருந்து ரூ. 7210 கோடியாக குறைக்கப்படுகிறது. 

சேலத்தில் உள்ள கல்வராயன் மலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு செங்கம் - சேலம் என வழிமாற்றம் செய்யப்படவுள்ளது. வனப்பகுதிகளில் 70 மீட்டர் அகலத்துக்கு அமைக்கப்பட இருந்த சாலைகள் 20 மீட்டர் குறைக்கப்பட்டு 50 மீட்டர் அகலமாக அமைக்கப்படும்.

வனப்பகுதியில் 13.2 கிலோ மீட்டருக்கு பதில் 9 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே சாலை அமைக்கப்படும். வனப்பகுதியில் 300 ஏக்கருக்குப் பதிலாக 103 ஏக்கர் வனப்பகுதி மட்டுமே கையகப்படுத்தப்படும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com