செவ்வாய்க்கிழமை 18 செப்டம்பர் 2018

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN | Published: 13th September 2018 04:30 AM


வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வரை (செப்.16) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
பள்ளிப்பத்தில் 70 மி.மீ. மழை: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் பள்ளிப்பத்தில் 70 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 50 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 40 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் பரூரில் தலா 30 மி.மீ.மழையும் பதிவானது.
திருச்சியில் 102 டிகிரி: தமிழகத்தில் திருச்சியில் அதிகபட்சமாக 102 டிகிரியும், சென்னை, சேலத்தில் தலா 100 டிகிரி வெயிலும் புதன்கிழமை பதிவானது.

 

More from the section

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
புழல் சிறையில் இருந்து மேலும் 9 காவலா்கள் பணியிட மாற்றம்
சிவபெருமானைப் பற்றித் தவறாக கூறும் ஆய்வு நூல்: சென்னைப் பல்கலை.யை முற்றுகையிட்ட சிவனடியாா்கள் 
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு: தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடிதம்
மதுரை: செவிலியர் வீட்டில் கருக்கலைப்பு செய்தபோது விபரீதம் - 7 மாத கர்ப்பிணி பலி