செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

நாகை கடற்கரையில் சமுத்திரப் பூஜை

DIN | Published: 13th September 2018 12:50 AM
நாகை அக்கரைப்பேட்டை கடற்கரையில் நடைபெற்ற சமுத்திரப் பூஜையில் தாம்பூலத் தட்டுகளுடன் பங்கேற்ற பெண்கள்.

 

இயற்கை சீற்றங்கள் இல்லாமல் மக்கள் நலமுடன் வாழ நாகை அக்கரைப்பேட்டை கடற்கரையில் சமுத்திரப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழா செப். 6-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 8 ஆம் தேதி செடில் விழா திருக்கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் அம்பாள் பிரகாரப் புறப்பாடும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில், வெவ்வேறு அலங்காரங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
செடில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சமுத்திரப் பூஜை, நாகை அக்கரைப்பேட்டை கடற்கரையில் புதன்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் உத்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், கோயிலிலிருந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது. தேங்காய், வாழைப்பழம், பூ உள்ளிட்ட தாம்பூலத் தட்டுகளுடன் திரளான பெண்கள் நாகை அக்கரைப்பேட்டை கடற்கரையில் குழுமி, பாரம்பரிய முறைப்படி சமுத்திர ராஜ வழிபாட்டை மேற்கொண்டனர். இயற்கை சீற்றங்கள் இல்லாமல், மக்கள் அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்தித்து, சமுத்திர ராஜனுக்கு அபிஷேகம் செய்விக்கும் விதமாக, பால், பன்னீர், மஞ்சள் நீர் உள்ளிட்ட திரவியங்களை கடலுக்கு அர்ப்பணித்து வணங்கினர்.

 

 

More from the section

திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி: முதல்வர் பழனிசாமி தாக்கு
2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது: பள்ளிகல்வித்துறை இயக்குநர் திட்டவட்டம்
இனியும் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையில் பேசினால் கருணாஸ் பதவிக்கு ஆபத்து: அமைச்சர் ஜெயகுமார்
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தது உறுதியாகிறது: மனோஜ் பாண்டியன்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை