செப். 21-இல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 21)


ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 21) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்தில் 20,000 அரசு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் கே. செந்தில், சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: 
ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை நோக்கிய அரசு மருத்துவர்களின் பேரணி கடந்த புதன்கிழமை (செப். 12) நடைபெற்றது. தொடர்ந்து, முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளித்தோம். ஆனால், இதுவரை எங்கள் கோரிக்கை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைக் கண்டித்தும், எங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 264 மாவட்ட, வட்ட மருத்துவமனைகள், 1,800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் 20,000 மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 21) காலை 7.30 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (செப்டம்பர் 22) காலை 7.30 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com