சனிக்கிழமை 20 அக்டோபர் 2018

மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவு: வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 19th September 2018 02:36 AM

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைத்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை பாரிமுனையில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர்சி.ஹெச்.வெங்கடாச்சலம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் இ.அருணாச்சலம், தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என்று மொத்தம் 600 பேர் பங்கேற்றனர். 

More from the section

மணல் கொள்ளைக்கு 6 மாணவர்கள் சாவு: இனியாவது திருந்துமா அரசு?: ராமதாஸ் கேள்வி
வடகிழக்குப் பருவ மழை தாமதமாகத் தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தேனி: வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளுக்கான திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு
ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?