தமிழ்நாடு

சிலை கடத்தல் விவகாரம்: அர்ச்சகர்கள் மீது நீதிபதிகள் அதிருப்தி

DIN


சிலைகள் மாயமானது தொடர்பாக அரசுக்குத் தகவல் அளிக்காமல் கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாகச் செயல்பட்டுள்ளார்களே தவிர தெய்வீகப் பணியை ஆற்றவில்லை என உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சந்நிதியில் உள்ள மயில் சிலை மாயமாகி உள்ளது. எனவே புதிய சிலையை வைத்து கோயிலின் குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர், கபாலீஸ்வரர் கோயிலில், வாயில் பூவுடன் இருந்த மயில் சிலை மாயமாகி உள்ளது. தற்போது வாயில் பாம்புடன் கூடிய மயில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. எனவே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலர்கள், செயல் அதிகாரிகளை நீக்கிவிட்டு, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய நிர்வாகக் குழுவை உருவாக்க வேண்டும். இந்த குழு, கோயிலை நிர்வகிக்க வழி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார். 
அப்போது நீதிபதிகள் மனுதாரரிடம், இந்த மயில் சிலை காணாமல் போனது எப்போது? காணாமல் போன விவரங்கள் எப்போது உங்களுக்குத் தெரியும் என்பன போன்ற கேள்விகளை எழுப்பினர். இந்த மயில் சிலை கடந்த 2004-ஆம் ஆண்டே காணாமல் போய் விட்டது. இதுகுறித்த விவரங்கள் தனக்கு 2017-ஆம் ஆண்டு தெரியவந்தது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், இத்தனை ஆண்டுகளாக கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் என்ன செய்தார்கள்? சிலைகள் மாயமானது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக செயல்படுகின்றனர். அவர்கள் தெய்வீகப் பணி ஆற்றவில்லை என வேதனை தெரிவித்தனர். அப்போது இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்வதற்கு இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கால அவகாசம் கோரினார். 
இதனையடுத்து, பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT