தாக்கியதாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்தார் தமிழிசை

தாக்கியதாகக் கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதிரை அவரது இல்லத்துக்குச் சென்று நேரில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
தாக்கியதாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்தார் தமிழிசை


தாக்கியதாகக் கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதிரை அவரது இல்லத்துக்குச் சென்று நேரில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
சென்னையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, அவரது பின்னால் நின்று கொண்டிருந்த நபர், அக்கா...பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது' என்று குறிப்பிட்டு அருகில் வர முயன்றார். அவரை தமிழிசையின் அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர்.
இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. ஆட்டோ டிரைவரை பாஜகவினர் தாக்கியதாக தகவல் பரவியது. அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் கதிர் என்பதும் அவர் ஜாபர்கான்பேட்டை ஆறுமுகம் தெருவில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கதிரின் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை நேரில் சென்றார் தமிழிசை. அவரிடம் இனிப்புகளை வழங்கியதுடன், தங்கள் கட்சியினர் யாரேனும் தாக்கினார்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதன்பின், கதிரின் இல்லத்தாருடன் சில நிமிடங்கள் பேசிய பிறகு, வெளியே வந்த தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியது:
ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாகத் தகவல் பரப்பப்பட்டதால் நேரில் வந்து விவரம் கேட்டேன். தான் ஒரு ஆட்டோ டிரைவராக இருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு பற்றிக் கேட்டதாகவும், மது குடித்து இருந்ததால் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். யாரும் அடிக்கவோ, மிரட்டவோ இல்லை என்றார். சில கட்சியினர் அவரை அணுகி தாக்கப்பட்டதாக கண்டன சுவரொட்டிகள் அச்சிடவும் கேட்டார்களாம். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com