மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவு: வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் சங்கங்களின்

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைத்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை பாரிமுனையில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர்சி.ஹெச்.வெங்கடாச்சலம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் இ.அருணாச்சலம், தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என்று மொத்தம் 600 பேர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com