தமிழ்நாடு

குடும்ப அட்டைதாரர்கள் விரும்பாத பொருள்கள் கட்டாயப்படுத்தப்படாது: அமைச்சர் காமராஜ் உறுதி

DIN


நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் விரும்பாத பொருள்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டாது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். சென்னை அண்ணாநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது விநியோக திட்டக் கிடங்கில் அவர் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். பின்னர், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-
கிடங்குகளில் தானிய சேமிப்பு இழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தானியங்கி இழுவை இயந்திரம், சிசிடிவி கண்காணிப்பு கேமரா, லாரிகளில் ஜிபிஎஸ். கருவி பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் பொது மக்களுக்குத் தேவையான பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பாத பொருள்களை வாங்கச் சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றார் அமைச்சர் காமராஜ்.
இந்த ஆய்வின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சோ. மதுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT