ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் 

ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் 

ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, இந்தக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியது.

இந்தக் கட்டடம் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, இது தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து அதிமுக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இன்று  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு நியாயமான கால அவகாசம் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

மேலும் ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி  ரகுபதியின் பதவிக்கு புதியதாக யாரை நியமிப்பது என்பது குறித்து வரும் 27-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் அதில்  உத்தரவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com