விருது பெற்றவர்களுடன் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன். 
விருது பெற்றவர்களுடன் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன். 

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பொறியாளர்களின் பங்கு முக்கியமானது: ஜி.விசுவநாதன்

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.


ஒவ்வொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி மேலாண்மை பள்ளி முன்னாள் மாணவர் சங்க 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா விஐடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
இதில் விஐடி மேலாண்மைப் பள்ளியில் பயின்று பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவரும் முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 
விழாவைத் தொங்கி வைத்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
விஐடி முன்னாள் மாணவர்கள் அமெரிக்கா, கனடா உள்பட பல நாடுகளிலுள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் 50 விஐடி முன்னாள் மாணவர் சங்கங்களைத் தொடங்கியுள்ளனர். கடந்த 15 நாள்கள் அவற்றில் 49 சங்கங்களுக்குச் சென்று முன்னாள் மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் எனது வெற்றி குறித்து கேட்டதற்கு, விஐடியின் முன்னாள் மாணவர்கள் பெற்றுள்ள வெற்றியே எனது வெற்றி என மகிழ்ச்சியுடன் கூறினேன்.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பொறியாளர்கள், மேலாண்மை நிர்வாகிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வளர்ச்சிக்கு தேவையான வளங்கள் உள்ளன. அவற்றை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விஐடி மேலாண்மை பள்ளிக்கு அமெரிக்கா நாட்டின் ஏசிபிஎஸ்பி உயரிய அங்கீகாரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் விஐடிமேலாண்மை பள்ளி முன்மாதிரி மேலாண்மைப் பள்ளியாக விளங்கி வருகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த கல்வி நிறுவனங்களை மறக்காமல், அதன் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மென்டிலீவி நிறுவனத்தின் தலைவர் தேவராஜ், கெளரவ விருந்தினராக பங்கேற்று பேசினார். முன்னதாக விஐடி மேலாண்மை பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்டார் டிவி நிர்வாக துணைத் தலைவர் அதுல் அகர்வால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். 
நிகழ்ச்சியில், விஐடி வேலூர், சென்னை வளாக மேலாண்மை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அமெரிக்கா நாட்டின் ஏசிபிஎஸ்பி உயரிய அங்கீகாரச் சான்றுகளை அப்பள்ளிகளின் பேராசிரியர்களிடம் ஜி.விசுவநாதன் வழங்கினார். மேலும், விஐடி மேலாண்மை பள்ளியில் பயின்று பல்வேறு முன்னணி நிறுவனங்களில் மேலாண்மை நிர்வாகிகளாக சாதனை படைத்து வரும் அஜந்தா எல்எல்பி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராஜிவ்ரஞ்ஜன், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அத்தந்திரா பவல், பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் நிறுவனத்தின் விற்பனை இணை இயக்குநர் எஸ்.சிதம்பரேஷ், சென்னை வேல்ஸ் உயர்கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஜி.ரஜினி, வேலூர் அரிமா சங்கத் தலைவர் ஆர்.விக்னஷ் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
இதில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சி.ஆர்.சுந்தரராஜன், வசுமதி, சுபஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கத் துணைத் தலைவர் பி.உப்பிலி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com