மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்னை, கோவை உள்பட நான்கு இடங்களில் தலைமை அலுவலகம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கட்சித் தலைமை அலுவலகம் ஏற்படுத்தப்படும் என அக்கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கட்சித் தலைமை அலுவலகம் ஏற்படுத்தப்படும் என அக்கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவையில் மக்கள் நீதி மய்யப் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  
ஒரே இடத்தில் கட்சித் தலைமை அலுவலகம் அமைய வேண்டும் என்ற மரபை முறியடித்து, தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கட்சித் தலைமை அலுவலகம் அமைக்கப்படும்.  இந்த நான்கு அலுவலகங்களுக்கும் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக சென்று பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் சந்திப்பார். 
கட்சியின் செயற்குழு விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய உறுப்பினர்களாக சந்திரசேகரன், காந்தி கண்ணதாசன், குருவையா கருப்பையா, ஜான் சாமுவேல், ஜான்சன் தங்கவேல்,  சினேகன்,  தருமபுரி ராஜசேகர், வழக்குரைஞர் விஜயன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
கட்சியின் உயர் நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமிக்கும் முழு அதிகாரம் கட்சியின் தலைவருக்கு வழங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com