காலாண்டு விடுமுறையில் நீட் பயிற்சி வகுப்புகள் 

காலாண்டுத் தேர்வு விடுமுறையில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்


காலாண்டுத் தேர்வு விடுமுறையில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்பை நிறைவு செய்யும் அறிவியல் பிரிவு மாணவர்கள், நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவதற்கு, பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், சிறப்புப் பயிற்சி பெறுகின்றனர். இதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால், தனியார் மையங்களில் சேர முடிவதில்லை. இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 412 மையங்களில் கடந்த 15 -ஆம் தேதி (செப்.15) முதல் நீட் தேர்வுக்காக இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 23 -ஆம் தேதி முதல் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த 10 நாள்களும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நீட் தேர்வு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 6,000 பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காலாண்டு தேர்வு விடுமுறையில் நீட் பயிற்சி மையங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com