தமிழ்நாடு

நான் தலைமறைவாக இல்லை: ஹெச்.ராஜா

DIN

உயர் நீதிமன்றம் மற்றும் காவல் துறையை விமர்சித்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா அக்டோபர் 22-ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதுதொடர்பாக ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல் துறையையும் விமர்சித்ததாக கூறி திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

உயர் நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரத்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வு தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காகப் பதிவு செய்வதாகவும், இது தொடர்பாக ஹெச்.ராஜா அக்டோபர் 22-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தெரியாது. நான் தலைமறைவாக இல்லை என்று பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா சனிக்கிழமை தெரிவித்தார். 

மேலும், திருக்கடையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் 82 சதவீதம் கொள்ளையடித்துள்ளனர் என்று பேட்டியளித்தார்.

சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் உற்சவர் சிலைகளை காட்சிப்படுத்தினர், ஆனால் தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிலைகளை ஏன் அனுமதிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகாரில் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT