முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு மீது வழக்குப் பதிவு

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு மீது வழக்குப் பதிவு

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து, அந்த அமைப்பின் தலைவர் நடிகரும், திருவாடனைத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோரை மிகவும் அவதூறாக பேசினார்.

இதையடுத்து கூட்டுச் சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.  கைது நடவடிக்கை குறித்து கருணாஸ் கூறுகையில், 

என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? சட்டப்பேரவை உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால், பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், என்னை கைது செய்ய போலீஸார் பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை. எங்களைப் போன்றவர்களை அரசு வேண்டுமென்று திட்டமிட்டு கைது செய்து வருகிறது. சட்டப் பேரவை உறுப்பினராக என் மீதான இந்த வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றார். 

மேலும் 3 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் 13-ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் 307-வது பிரிவு (கொலை முயற்சி வழக்கு) நீக்கப்பட்டு எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.  

இதனிடையே, தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு  எதிராக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு மீது கோயம்பேடு மற்றும் எஸ்ஆர்எம்சி காவல் நிலையங்களில்  2 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com