உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநிலக் குழு வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநிலக் குழு வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் மாநிலக் குழுக் கூட்டம் விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள தனியார் அரங்கில் சனிக்கிழமை தொடங்கிநடைபெற்று வருகிறது.
 மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ராஜேந்திரன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில், தமிழக காவல் துறையை அவதூறாகப் பேசியதாக எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
 அதே சமயத்தில், காவல் துறையையும், நீதித் துறையும், இழிவாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்த பிறகும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கைது செய்யப்படாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஆளும் கட்சியின் விருப்பப்படி செயல்படும் தமிழக காவல் துறையின் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையை கண்டிப்பது, மேலும், ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்துவது,
 உயர் நீதிமன்றம் கெடு விதித்த பிறகும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வரும் அதிமுக அரசை கண்டிப்பதுடன் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்துவது,
 உள்ளாட்சித் தேர்தலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட மன்றங்கள் பொறுப்பேற்கும் வரை அநியாய வரி வசூலை நிறுத்தி வைப்பதுடன், 100 சதவீத சொத்து வரி உயர்வு என்னும் நிர்வாக உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் திங்கள்கிழமையும் நடைபெறுகிறது. அன்று மாலை விழுப்புரத்தில் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரகாஷ் காரத் உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com