தமிழ்நாடு

எழுவர் விடுதலையை அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்: நீதிபதி அரிபரந்தாமன்

தினமணி

எழுவர் விடுதலையை மேலும் அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கூறினார்.
 ஏழு தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க வலியுறுத்தி மதுரை கோ.புதூரில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
 இதில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் பேசியது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் இந்த ஏழு பேரும் நேரடியாக ஈடுபடவில்லை. நேரடியாக கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்று வரும் பலரை தமிழக அரசு தலைவர்கள் பிறந்தநாள்களை முன்னிட்டு விடுவித்து வருகின்றனர். ஆனால், இவர்களை விடுவிப்பதில் மட்டும் தொடர்ந்து அரசியல் லாபத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
 சிறையில் இருக்கும் ஏழு பேரின் குடும்பத்தினரும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோர்கள் தங்களது கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் கழிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. மகாத்மா காந்தியைக் கொலை செய்தவர்களையே பதினாறு ஆண்டுகளில் விடுதலை செய்தனர். ஆனால், 28 ஆண்டுகள் கடந்தும் இந்த ஏழு பேர் விடுதலை செய்யப்படவில்லை. ராகுல் காந்தி குடும்பமே மன்னித்து விட்டதாக கூறிவிட்ட நிலையில், இதற்கு அவர்களது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு பாஜக தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
 எழுவர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை பாஜக நடத்தி வருகிறது. அனைத்து கொள்கைகளிலும் காங்கிரûஸ எதிர்க்கும் பாஜக, இந்த விஷயத்தில் மட்டும் ஆதரிப்பது ஏன் என புரியவில்லை. இதன் பின்னால் உள்ள அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏழு பேரும் தமிழர்களாக இருப்பதால் தான் அவர்களது விடுதலை தாமதமாகிறது என நினைக்கிறேன்.
 எழுவர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நிராகரிக்கும் உரிமை அவருக்கு இல்லை. ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பேரின் குடும்பத்தினர் எழுவர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இது அரசியல் கட்சியினரின் தூண்டுதலினால் தொடரப்பட்ட வழக்கு என்பது என்னுடைய கருத்து. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், செய்யாத குற்றத்துக்காக சிறையில் இருக்கும் எழுவரின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்களது தரப்பு நியாயத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
 இதை மேலும் அரசியலாக்காமல் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். எனவே தமிழர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து எழுவர் விடுதலை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
 வழக்குரைஞர் லஜபதிராய், பேராசிரியர் இரா.முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT