மனுவைப் படித்துப் பார்த்தார்; விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்: அற்புதம்மாள்

தமிழக ஆளுநர் பன்வாரிலாலிடம் அளித்த மனுவை முழுவதும் படித்துப் பார்த்தார், 7 பேரும் விரைவில் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.
மனுவைப் படித்துப் பார்த்தார்; விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்: அற்புதம்மாள்


சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலாலிடம் அளித்த மனுவை முழுவதும் படித்துப் பார்த்தார், 7 பேரும் விரைவில் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.
 
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து, தனது மகன் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், 7 பேர் விடுதலை தொடர்பாக மனு அளித்தேன். அதனை முழுமையாகப் படித்துப் பார்த்தார்.

நான் கொடுத்த மனுவில் பேரறிவாளன் பரோலில் வந்த போது எப்படி இருந்தான் என்பதையும், அதே போலவே நடந்து கொள்வார் என்றும் தெரிவித்திருந்தேன். 

இவர்களது விடுதலை விவகாரத்தில், வழக்கை விசாரித்து தண்டனை அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தாமஸ் தெரிவித்திருந்த கருத்தைக் குறிப்பிட்டு உள்ளேன். வழக்கில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதால் இவர்களை விடுவிக்கலாம் என்று அவர் கூறியிருந்த கருத்தை பதிவு செய்துள்ளேன்.

மேலும் வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன் கூறியிருந்த கருத்துகள் தொடர்பாக சி.டி. ஒன்றையும் அவரிடம் வழங்கினேன். அனைத்தையும் அவர் பெற்றுக் கொண்டார். நான் கொடுத்த மனுவில் இருந்த ஒரு சிறு பிழையை எடுத்துக் கூறினார். திருத்திக் கொடுத்தேன்.

சீக்கிரமே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆளுநரை சந்தித்தப் பிறகு, 7 பேரும் விரைவில் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அற்புதம்மாள் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com