வெள்ளிக்கிழமை 19 அக்டோபர் 2018

ஆதார் எண்ணால் தனி மனித சுதந்திரம் பாதிக்கக்கூடாது: கமல்ஹாசன்

DIN | Published: 26th September 2018 01:15 PM

ஆதார் எண்ணால் தனி மனித சுதந்திரம் பாதிக்கக்கூடாது: கமல்ஹாசன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை வந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
இந்தியாவில் சில முன்னோடி திட்டங்கள் கூட நவீன் பட்நாயக்கிடம் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் பார்த்து பொறாமைபடும் அளவிற்கு ஒடிசா நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 

திறமைக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுத்தாக வேண்டும். ஆனால் அதனை ஜாதி அடிப்படையில் மறுத்திவிட முடியாது. ஆதார் எண்ணால் தனி மனித சுதந்திரம் பாதிக்கக்கூடாது. அரசு மக்களுக்கு செய்யும் திட்டங்களை வரவேற்கலாம். 

ஆனால் தனிமனித சுதந்தரம் பாதிக்கக்கூடாது. பெட்ரோல், டீசல் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். கிராம பஞ்சாயத்தை மக்களிடம் பிரபலப்படுத்தியது மக்கள் நீதி மய்யம்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

More from the section

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்க தடை
தமிழகத்தில் எத்தனை பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனா்? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
கமல்ஹாசனை விமர்சிக்கவே அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை பயன்படுத்தினேன்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா? என மக்கள் ஏங்குகின்றனர்: மு.க.ஸ்டாலின்
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்