சுட்டெரிக்கும் கோடையால் அதிகரித்த நுங்கு விற்பனை!

அரியலூர் மாவ ட்டத்தில் கடுமையான கோடை வெயில் இருந்து வரும் நிலையில், நுங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. 
சுட்டெரிக்கும் கோடையால் அதிகரித்த நுங்கு விற்பனை!

அரியலூர் மாவ ட்டத்தில் கடுமையான கோடை வெயில் இருந்து வரும் நிலையில், நுங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. 

தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். மாலை நேரங்களில் மட்டுமே வெளியே வருகின்றனர். அந்தளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.  இதிலிருந்து தப்ப பொதுமக்கள் குளிர்பானங்களையும், பழங்களையும் வாங்கி சாப்பிடுகின்றனர். கோடையிலிருந்து உடலைப் பாதுகாக்கவும், சூட்டை தணிக்கவும் இயற்கை வழங்கிய முக்கியக் கொடையாக  நுங்கு உள்ளது.  

தற்போது மாவட்டத்தில் நுங்கு சீசன் தொடங்கியுள்ளதா    ல் அதன் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.   அரியலூர், ஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பனை மரங்கள் உள்ளன. இவற்றை குத்தகைக்கு எடுத்தவர்கள், நுங்கு பருவத்தைப் பார்த்து அவற்றை வெட்டி சுமை ஆட்டோக்கள் மூலம் கொண்டு வந்து அரியலூர் பேருந்து நிலையம், பெருமாள் கோயில் தெரு, செந்துறை சாலை, ஜயங்கொண்டம் பேருந்து நிலையம், ஆண்டிமடம் பேருந்து நிறுத்தம், மீன்சுருட்டி, திருமானூர்,தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.3 நுங்குச் சுளை ரூ. 10க்கு விற்கப்படுகிறது.

காலை 10 மணிக்கு கடை விரித்தால் மதியம் 2 மணிக்குள் அனைத்தும் விற்று விடுகிறது. ஒவ்வொரு நுங்கிலும் 3  கண் வரை இருக்கிறது. இவற்றை தனியே வெட்டியெடுத்து விற்கிறார்கள். இதுகுறித்து நுங்கு விற்பனையாளர்கள் கூறியது:  பனை மரங்களை குத்தகைக்கு எடுத்தபின் மரத்தில் ஏரி நுங்கு வெட்டுதல்,  விற்பனை செய்தல், விற்பனைக்காக மினி சரக்கு வாகனங்களில் எடுத்துவருதல். என செலவு அதிகளவில் உள்ளது. 3 நுங்கு சுளைகளை ரூ. 10க்கு விற்கிறோம். வாடிக்கையாளர்கள் கூடுதலாக ஒன்றிரண்டு கேட்டால் கொடுக்க வேண்டியுள்ளது.

ஒரு குலையில் 6 முதல் 10 நுங்குகள் இருக்கும். ஒரு பருவத்தில் 2 முதல் 3 முறை நுங்கு குலைகளை வெட்டியெடுக்க முடியும். நுங்குக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அடுத்தாண்டு கோடை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com