தமிழ்நாடு

ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலி என்று அறிவிக்க கோரி ஆளுநர், சபாநாயகருக்கு ஸ்டாலின் கடிதம் 

DIN

சென்னை: ஓசூர் தொகுதி காலி என்று அறிவிக்க கோரி ஆளுநர், சபாநாயகருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஓசூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. கலவரம் ஒன்றில் பங்கேற்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், சிறப்பு நீதிமன்றம்  அவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கியது. இதையடுத்து அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.

எனவே ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலி என்று அறிவிக்கக் கோரி பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் இதுவரை சபாநாயகர் அதனை காலி என்று அறிவிக்கவில்லை.

இந்நிலையில் ஓசூர் தொகுதி காலி என்று அறிவிக்க கோரி ஆளுநர், சபாநாயகருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சபாநாயகர் தனபால் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா ஆகியாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஓசூர் தொகுதியை காலி என்று அறிவிக்க சபாநாயகர் தனபால் இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT