மக்களவை தேர்தல் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகும்: ஓ.பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தல் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகும் என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகும்: ஓ.பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தல் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகும் என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, பாஜக, அதிமுக தலைவர்கள் சென்னையில் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசினர். அதிமுக தரப்பில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் மத்திய அமைச்சரும்,  பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல்,  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரது இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இரவு 10.15 மணிக்குத் தொடங்கிய சந்திப்பு  மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. அதிமுக, பாஜக தரப்பு பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவு எட்டப்படும் சூழலில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாஜக தலைவர்கள் சந்தித்து கூட்டணியை இறுதி செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணி தொடர்பாக தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகும். அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய விரைவில் நேர்காணல் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com