என்னைக்  காப்பி அடிக்கிறீர்களே, வெட்கமாக இல்லை?: ஸ்டாலினைக் காய்ச்சிய கமல்

கிராம சபைக் கூட்ட திட்ட பங்கேற்பை என்னை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே, வெட்கமாக இல்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னைக்  காப்பி அடிக்கிறீர்களே, வெட்கமாக இல்லை?: ஸ்டாலினைக் காய்ச்சிய கமல்

சென்னை: கிராம சபைக் கூட்ட திட்ட பங்கேற்பை என்னை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே, வெட்கமாக இல்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:

கிராம சபை எனும் அமைப்பு 25 வருடங்களாக இருக்கிறது. இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இப்போது கிராம சபைக் கூட்ட திட்ட பங்கேற்பை என்னை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே, வெட்கமாக இல்லை?

இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததை நினைத்து வருந்துகிறேன்.

நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி, என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. யார் வேண்டுமானாலும் அதைப்  படிக்கலாம்

நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டெல்லாம் வெளியே வரமாட்டேன், அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாற்றிக் கொண்டுதான் வருவேன்.

தமிழன் என்பது ஒரு தகுதியல்ல, அது விலாசம், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது தான் முக்கியம்.

முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது. அரசியலையே நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள்.

முதலமைச்சர் என்பவர் மாநிலத்தை   வழிநடத்தும் ஓர் அலுவலர் மட்டுமே.

தில்லி இல்லாமல் ஆட்சி நடத்தலாம் என்று தமிழ்நாடு நினைக்க கூடாது. அதே போல தமிழ்நாடு வேண்டாம் என்று தில்லியும் நினைக்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com