தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அலறும் வாகன ஓட்டிகள்..!

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து விலை 16 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 14 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அலறும் வாகன ஓட்டிகள்..!


சென்னை: பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து விலை 16 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 14 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெயின் விலையில் காணப்பட்ட சரிவை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.16 வரையிலும், டீசல் ரூ.14 வரையிலும் குறைந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்தது.

கடந்த ஐந்து தினங்களாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எரிபொருள்களின் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். 

இந்நிலையில், இன்று (பிப்.18) எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.61 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 69.84 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு காலை 6 முதல் அமலுக்கு வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com