தமிழ்நாடு

8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு : கருத்து கேட்புக் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

DIN


செங்கத்தில் பசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
சேலம் - சென்னை இடையே அமைக்கப்பட உள்ள பசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுக்கள் அளித்த செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட அத்திப்பாடி, கட்டமடுவு, நீப்பத்துறை, மேல்ராவந்தவாடி, மேல்வணக்கம்பாடி, பக்கிரிபாளையம், மேல்புழுதியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை வரவழைத்து, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அதிகாரிகள் முயன்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்புப் பணிக்காக செங்கம் டி.எஸ்.பி.  கூத்தலிங்கம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வருவாய்த் துறையினர் கூட்டம் நடத்த தயார் நிலையில் இருந்தனர். ஆனால், விவசாயிகள் நண்பகல் 12 மணிக்கு செங்கம் துக்காப்பேட்டியில் இருந்து பசுமைவழிச் சாலைக்கு நிலத்தை வழங்கமாட்டோம் என முழக்கமிட்டபடி, ஊர்வலமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வந்தனர்.
அப்போது, வருவாய்த் துறை மூலம் கடிதம் பெறப்பட்ட விவசாயிகள் மட்டும் ஒவ்வொருவராக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டத்தில் மொத்தமாகப் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்தனர். அதற்கு போலீஸார், வருவாய்த் துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால், பசுமைவழிச் சாலைக்கு நிலத்தை தரமாட்டோம் என மீண்டும் முழக்கம்  எழுப்பினர். அப்போது, பெண்கள் சிலர் மண்ணை அள்ளித் தூற்றி, அதிகாரிகளுக்கு சாபம் இட்டனர். 
தொடர்ந்து, கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டுச் சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT