அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: 22 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்கள்
வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளையை அடக்க முயலும் காளையர்கள்
வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளையை அடக்க முயலும் காளையர்கள்


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் காளைகள் முட்டியதில் 22 வீரர்கள் காயமடைந்தனர். 
விருத்தமுனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு திங்கள்கிழமை காலை தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி முன்னிலையில், வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.  காலை 9.30 மணிக்கு தொடங்கிய போட்டியின் முதல் நிகழ்வாக கோயில் காளையும், பின்னர் மற்ற மாவடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. 
சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் மதுரை தீபக்குமார் (19) , கொட்டாப்பட்டு வைரமணி (22), சூரியூர் சந்தோஷ் (20), பார்வையாளர்கள் அன்னவாசல் முருகன் (36), மழவராயன்பட்டி  தங்கராஜ் (25),  முக்கண்ணாமலைப்பட்டி கிருஷ்ணன் (22) உள்ளிட்ட 22 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு அதேபகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிலர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, போட்டியைக் கண்டுகளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com