அன்பழகனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நலம் விசாரித்தார்.
அன்பழகனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு


திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நலம் விசாரித்தார். உடல்நலமின்மையால் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் க.அன்பழகன் ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அன்பழகன் இல்லத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு ஆகியோரும் உடன் சென்று அன்பழகனிடம் நலம் விசாரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com