ஆளுநர் கிரண் பேடி மீது மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார்: முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டதாக முதல்வர்
ஆளுநர் கிரண் பேடி மீது மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார்: முதல்வர் நாராயணசாமி தகவல்


புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டதாக முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.
ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே 6-ஆம் நாளாக திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  
புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி விதிகளை மீறி, அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு தொல்லை கொடுத்து வருகிறார். அவரது அதிகார துஷ்பிரயோகம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரவின்படி, கட்சியின் பொருளாளர் அகமது படேல், மாநிலங்களவை குழுத் தலைவர் குலாம் நபி ஆசாத்,  துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, புதுவை காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் நேரில் சென்று புகார் தெரிவித்தனர்.
 மனுவை பெற்றுக்கொண்ட ராஜ்நாத்சிங், பிரதமர் மோடியுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை எதிரே நடைபெறவுள்ள தர்னாவுக்கு ஆதரவு தெரிவிக்க மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோரும் புதுச்சேரி வரவுள்ளனர்.
 தில்லியும், புதுவையும் ஒரே மாதிரியான பிரச்னையை சந்திக்கின்றன. மத்திய நிதிக் குழு, ஜிஎஸ்டி கவுன்சில், நீதி ஆயோக் ஆகியவற்றிலும் ஒரே கோரிக்கையை இரு மாநில முதல்வர்களும் வலியுறுத்துகிறோம். இந்த விவகாரத்தில் இருவரும் இணைந்துதான் செயல்படுகிறோம்.  மாநில அந்தஸ்துதான் எங்கள் நோக்கம் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com