தமிழ்நாடு

சட்ட விரோத பேனர் விவகாரம்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

DIN


சட்டவிரோத பேனர் விவகாரத்தை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா அல்லது வானத்தில் (ஹெலிகாப்டர்) பறக்கிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமையன்று ஆஜரான சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டதாக முறையீடு செய்தார். 
அப்போது நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை வைக்கக்கூடாது, விதிகளுக்குப் புறம்பாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற வேண்டும். சட்டவிரோதமாக பேனர்கள்  வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் 8 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் அந்த உத்தரவுகளை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தவில்லை. இதனால் சட்டவிரோத பேனர்களும் குறையவில்லை, உத்தரவுகளை நிறைவேற்றாததால் தொடரப்படும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் குறையவில்லை. 
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகளின்போது அரசு வழக்குரைஞர், சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டுச் சொல்வதாக ஒவ்வொரு முறையும் தெரிவிக்கிறார். அதிகாரிகளுக்கு இதற்காகவா ஊதியம் வழங்கப்படுகிறது. சட்ட விரோத பேனர்கள் தொடர்பான வழக்கில் தொடர்ந்து காலஅவகாசம் கோரினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர எல்லா விதமான முகாந்திரமும் உள்ளது. மேலும் அதுபோன்ற 
நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றத்தை அரசும், அரசு அதிகாரிகளும் தான் தூண்டுகின்றனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் ஆறு மாத காலம் தான் தண்டனை வழங்க முடியும் என்றாலும் கூட அதைத்தாண்டி அளவுகடந்த அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு என்பதை அரசு அதிகாரிகள் மறந்துவிடக்கூடாது. 
விதிகளை மீறி சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப்பட்டுள்ள சட்ட விரோத பேனர்களை ஒரு வார காலமாக அகற்றப்படவில்லை என்றால், அரசு அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா அல்லது விமானத்தில் பறக்கிறார்களா எனத் தெரியவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி  உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT