தமிழ்நாடு

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும்: கேஎஸ் அழகிரி

DIN

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தி.மு.க. எம்.பி.யான கனிமொழி நேற்று தில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. 

இதனிடையே தில்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி விமான நிலையித்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இன்று மாலை அறிவிக்கப்படும். அதிமுக, பாமக, பாஜக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத, கொள்கையற்ற கூட்டணி. இந்தியாவின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT