தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: த.மா.காவுடன் அதிமுக பேச்சுவார்த்தை

DIN

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக த.மா.காவுடன் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுவுடன் கூட்டணியில் இணைவது நேற்று உறுதியானது. அதன்படி, பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இன்று கூட்டணி தொடர்பாக த.மா.காவுடன் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் த.மா.கா சார்பில் விடியல் சேகர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT