ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல்நிலையம் முன்பு டிக்டாக்: இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல்நிலையம் முன்பு டிக்டாக் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல்நிலையம் முன்பு டிக்டாக்: இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல்நிலையம் முன்பு டிக்டாக் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம் கரிசல் குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(40). இவர் வன்னியம்பட்டி காவல்நிலையம் முன்பு டிக்-டாக் செயலி மூலம் நடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு பதிலளித்து பேசிய தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்,  ப்ளூவேல் விளையாட்டை தடை செய்தது போல், டிக் டாக்-கையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகமான டிக்டாக் என்ற பெயரிலான செல்பேசி செயலி கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவைச் சேர்ந்த பைட்-டான்ஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலியில் 15 வினாடிகளுக்கு பயனாளிகள் தங்களின் கருத்தை படம் பிடித்து வெளியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com