7 பேர் விடுதலைக்கான மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்போம்: இந்திய கம்யூனிஸ்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளவன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பது என்று இந்திய

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளவன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை தமிழக ஆளுநர் அவசியமற்ற நடைமுறைகளால் காலதாமதம் செய்து வருகிறார். தமிழக அரசு இனியும் தாமதம் செய்யாமல் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக அற்புதம்மாள் முயற்சியால் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலியில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் படுவோர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் நீண்டகாலம் விசாரணைக் கைதிகளாக வைத்திருப்பது நீதி நெறிமுறைகளுக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானதாகும். குற்றமற்ற நீண்டகால சிறைவாசிகளை அரசு விடுதலை செய்ய வேண்டும். 
சமூக செயல்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது ஆழமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள ஒரு சமூக செயல்பாட்டாளர் காணாமல் போயிருப்பது பொதுவாழ்வில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் செயலாகும். அவரைத் தேடி கண்டுபிடித்து, பாதுகாப்பாக மீட்பதுடன், இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெல்லை மாவட்டச் செயலாளர் எஸ்.காசி விஸ்வநாதன் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். 
மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் சுப்பராயன், மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com