தமிழ்நாடு

சிறைத் துறை சார்பில் பெட்ரோல் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

DIN

நான்கு இடங்களில் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் நிரப்பு நிலையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

தமிழகத்தில் சிறைவாசிகள் புதிய வாழ்வைத் தொடங்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சிகளின் மூலமாக தயாரிக்கப்படும் பொருள்கள் சிறை அங்காடிகளின் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.

சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், தமிழக அரசின் சிறைத் துறை, இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து வேலூர் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகங்களிலும் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இதன்மூலம், சிறைத் துறைக்கு பெட்ரோல் பொருள்களின் விற்பனை மற்றும் வாடகையாக மாதந்தோறும் சுமார் ரூ.2.31 லட்சம் வருவாய் கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விளையாட்டுத் துறை புதிய கட்டடங்கள்: தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் விளையாட்டு அரங்க வளாகத்தை ஒட்டியுள்ள இடத்தில் விளையாட்டு விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகளையும் முதல்வர் துவக்கி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT