விடுதலைக்கு உதவ முதல்வருக்கு நளினி கடிதம்

தற்போதைய அரசியல் சூழல் 7 பேரின் விடுதலைக்கு சாதகமாக நிலவுவதால் ஆளுநரை வலியுறுத்தி விடுதலைக்கு உதவும்படி தமிழக முதல்வருக்கு நளினி சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
விடுதலைக்கு உதவ முதல்வருக்கு நளினி கடிதம்

தற்போதைய அரசியல் சூழல் 7 பேரின் விடுதலைக்கு சாதகமாக நிலவுவதால் ஆளுநரை வலியுறுத்தி விடுதலைக்கு உதவும்படி தமிழக முதல்வருக்கு நளினி சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதிகள் 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், இதுவரை ஆளுநர் எவ்வித முடிவும் தெரிவிக்காமல் உள்ளார்.
இதனிடையே, 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் கடந்த வாரம் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர், சிறைத் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து கடந்த 15-ஆம் தேதி இரவு உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில், வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி, சிறைத் துறை மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். 
அதில், இந்தியாவிலேயே அதிகபட்ச ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவரும் பெண் சிறைவாசியாக இருந்து வருகிறேன். என்னுடன் சேர்த்து 7 பேரும் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறோம். விடுதலை செய்யப்படும் நாளை ஒவ்வொரு நாளும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். ஆனால், எங்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் இதுவரை முடிவு எடுக்காமல் இருப்பது ஏமாற்றத்தை அளித்து வருகிறது. 
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எங்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி 7 பேரின் விடுதலைக்கு ஆளுநரை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com