பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல நகைக்கடையின் ரூ.98 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை 

பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல நகைக்கடையின் ரூ.98 லட்சம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல நகைக்கடையின் ரூ.98 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை 

காக்காய்சாவடி: பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல நகைக்கடையின் ரூ.98 லட்சம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கேரளாவைத் தலைமயிடமாகக் கொண்டு செயல்படும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்கு தமிழகத்திலும் கிளைகள் உள்ளன. அந்த கிளைகளுக்கு கேரளாவில் இருந்து முறையான ஆவணங்களுடன் கொண்டு வரப்பட்ட ரூ. 98 லட்சம மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பம் நடந்துள்ளது. 

இதுதொடர்பாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவன தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குறிப்பிட்ட சம்பவமானது திங்கள்கிழமையன்று (07.01.19) தமிழக - கேரள மாநில எல்லைப்பகுதியான வாளையாறுக்கு அருகே உள்ள சாவடி என்னும் இடத்தில் நடந்துள்ளது. கேரளாவில் இருந்து, முறையான ஆவணங்களுடன் ரூ. 98 லட்சம மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கார் ஒன்றில் கொண்டு வரப்பட்டது. 

நகைகள் கொண்டு வரப்பட்ட குறிப்பிட்ட காரை இரண்டு கார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சாவடி பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பம்ப் ஒன்றை குறிப்பிட்ட வாகனம் நெருங்கிய போது, தொடர்ந்து வந்த இரு கார்களும்  நகைகள் உள்ள குறிப்பிட்ட காரை முன்னும் பின்னுமாக சுற்றி வளைத்தது. அதில் இருந்து இறங்கியவர்கள் இந்த காரின் கண்ணாடிகளை உடைத்து ஓட்டுனர்களை வெளியே தள்ளி விட்டு, காருடன் தப்பிச் சென்றனர்.  

இந்த சம்பவம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் காப்பீட்டு நிறுவனத்தில் இழப்பீடு பெறவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட காரை சற்று தொலைவில் கண்டறிந்தனர். ஆனால் அதில் நகைகள் எதுவும் இல்லை. தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைநடைபெற்று வருகிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com