தமிழ்நாடு

காணும் பொங்கலைக் கொண்டாட திட்டமிடும் சென்னைவாசிகளே.. கவனிக்க!

DIN


காணும் பொங்கலைக் கொண்டாட திட்டமிடும் சென்னைவாசிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 2019ம் ஆண்டு காணும் பொங்கலை முன்னிட்டு 17.01.2019 அன்று சென்னை மாநகரின் சுற்றுலாத் தளங்களைக் காண வரும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, அண்ணாசதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி. கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம்., முட்டுக்காடு (படகு குழாம்), கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத் திடல் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள், சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT