தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் விழா: 108 கோ பூஜை; மகா நந்திக்கு ஒரு டன் காய்கனி, மலர்களால் அலங்காரம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் திருவிழாவையொட்டி, மகா நந்தியெம்பெருமானுக்கு புதன்கிழமை ஏறத்தாழ ஒரு டன்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் விழா: 108 கோ பூஜை; மகா நந்திக்கு ஒரு டன் காய்கனி, மலர்களால் அலங்காரம்


தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் திருவிழாவையொட்டி, மகா நந்தியெம்பெருமானுக்கு புதன்கிழமை ஏறத்தாழ ஒரு டன் அளவில் காய்கனிகள், மலர்கள், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 
மேலும் 108 கோ பூஜையும் நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, மகா நந்தியெம் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை மகா நந்திக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், புடலங்காய், வாழைக்காய், கேரட், பீட்ருட், செள செள, முள்ளங்கி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், வாழைப்பூ உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசி, எலுமிச்சை போன்ற கனி வகைகளாலும், அதிரசம், ஜிலேபி, ஜாங்கிரி, பால்கோவா போன்ற இனிப்புகளாலும், மல்லிகை, செம்பருத்தி போன்ற பூ வகைகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ ஒரு டன்னாகும். பின்னர், சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
மேலும், மகா நந்தியெம் பெருமான் முன் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் 108 பசு மாடுகள் நிறுத்தப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து, மாலை, பட்டுத் துணி அணிவிக்கப்பட்டன. 
இதையடுத்து, பசுக்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நந்தியெம்பெருமானை வழிபட்டனர்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா நந்திக்கு புதன்கிழமை காய்கனி, மலர்கள் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட அலங்காரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com