ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
கோமல் கடைவீதியில் கருப்புக் கொடியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கோமல் கடைவீதியில் கருப்புக் கொடியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.


திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அருகே திருக்காரவாசல் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் தினத்தில் திருக்காரவாசல் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டி பொங்கல் திருநாளை கருப்புத் தினமாக கடைபிடிக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. 
அதன்படி திருக்காரவாசல், கோமல் பகுதிகளில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தன. 
கோமல் கடைவீதியில் கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமையில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் சாமியப்பன், ஒன்றியச் செயலர்கள் என். இடும்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தொடரும் போராட்டங்கள்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகள் விவசாய அமைப்புகள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது. இப்பேரணி திருக்காரவாசலில் புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்கிறது. 
இதேபோல் ஜன. 22-இல் திருக்காரவாசலில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com