கின்னஸ் சாதனை நிகழ்வான விராலிமலை ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டி இருவர் சாவு 

கின்னஸ் சாதனை நிகழ்வான விராலிமலை ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டி இருவர் சாவு 

கின்னஸ் சாதனை நிகழ்வாக நடைபெற்ற விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதால் இருவர் பலியாகினர்.

விராலிமலை: கின்னஸ் சாதனை நிகழ்வாக நடைபெற்ற விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதால் இருவர் பலியாகினர். 

விராலிமலையில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர். காலை 8 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

2 ஆயிரம் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. வெற்றி பெறுவோருக்கு சிறப்புப் பரிசுகளாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பீரோ, கட்டில், கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களும் வழங்கப்பட்டன. 

இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டை விடவும் அதிக எண்ணிக்கையில் காளைகளும், மாடுபிடி வீரர்களும், பரிசுகளும் வழங்கப்பட்டதால், இது உலக சாதனைப் பட்டியலில் இடம்பெறவுள்ளது.  இதற்காக லண்டனில் இருந்து இருவர் பார்வையாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 518 வாடிவாசல்கள் உள்ளதாகவும், வேறெந்த மாவட்டத்திலும் இதுபோன்ற ஜல்லிக்கட்டு விழாவுக்கான வாடிவாசல்கள் இந்த எண்ணிக்கையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதால் இருவர் பலியாகினர். 

ஜல்லிக்கட்டில் காளை பாய்ந்து மணப்பாறை சொரியம்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் ராமு என்பவர் பலியானர். அதேபோல மாடு முட்டியதால், திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எனும் ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 43) என்பவரை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com