தமிழ்நாடு

குட்கா பதுக்கிய வழக்கில் கைதானவரின் கடைக்கு சீல்

DIN

கரூரில் 5.6 டன் குட்கா பொருள்களைப் பதுக்கிய வழக்கில் கைதான தங்கராஜின் மளிகைக் கடைக்கு போலீஸார் சனிக்கிழமை சீல் வைத்தனர்.
 நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சோதனைச்சாவடியில் கடந்த 14 ஆம் தேதி இரவு வாகனச் சோதனையின்போது, வேனில் தடை செய்யப்பட்ட 5.6 டன் குட்கா பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து,  வேன் ஓட்டுநர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம்(43), வேனில் இருந்த ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பாபுலால்(33) ஆகியோரை நாமக்கல் போலீஸார் கைது செய்து விசாரித்து வந்தனர். மேலும்,  
இதுதொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரனுக்கு போலீஸார் தகவல் அளித்தனர்.  இதைத்தொடர்ந்து, கரூரில் குட்கா பொருள்கள் பதுக்கிய வழக்கில் கரூர் ராயனூர் கேகே.நகரைச் சேர்ந்த செல்வராஜ், சின்ன ஆன்டாங்கோவிலைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், கரூர் உழவர் சந்தை அருகே கைதான தங்கராஜ் நடத்தி வந்த மளிகைக் கடைக்கு கரூர் நகர காவல் நிலையத்தினர் சனிக்கிழமை சீல் வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT