கொடநாடு சதியின் பின்புலத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கொடநாடு விவகாரத்தை சாதாரணமாக விடமாட்டோம்; அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

கொடநாடு விவகாரத்தை சாதாரணமாக விடமாட்டோம்; அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
குடும்பமே குறிக்கோள்: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கிராமம் கிராமமாகச் செல்கிறார். அவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஏன் செல்லவில்லை? நாடாளுமன்ற தேர்தல் வருவதாலேயே அவர் கிராமம் கிராமமாக செல்கிறார்.
மத்தியில் 16 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரே கட்சி திமுகதான். பாஜகவுடன் கூட்டணி அமைத்து 5 ஆண்டுகள் மத்தியில் அமைச்சரவையில் இருந்துவிட்டு, இப்போது பாஜகவை தீண்டத்தகாத கட்சி என்கிறார் ஸ்டாலின். அதிகாரத்தில் இருந்தபோது அந்தக் கட்சி இனித்தது. பதவியில் இருந்தபோது அந்தக் கட்சி நல்ல கட்சி. இப்போது அது நல்ல கட்சி இல்லை. நான் பாஜகவுக்கு ஆதரவாக பேசவில்லை. உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கொடநாடு விவகாரம்: கொடநாடு பிரச்னையில் பொய்யான குற்றச்சாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். கொடநாட்டில் தனியார் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் கூலிப்படையினர் கொள்ளையடித்தார்கள். அதில் காவலாளி உயிரிழந்தார். அதில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்தது அதிமுக அரசு. கனகராஜின் பெயரை பயன்படுத்தி திமுக நாடகமாடுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, "இதற்கு பின்புலமாக அரசியல் ரீதியாக யாரோ சதித்திட்டம் தீட்டுகிறார்கள். 
அதை விசாரணை மூலம் நிரூபிப்போம்' என்று சொன்னேன். அது இப்போது நிரூபணமாகியுள்ளது. கூலிப்படையினரை திமுகவினர் ஜாமீனில் எடுத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் திட்டம் தீட்டித்தான் சதி செய்தார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரத்தை சாதாரணமாக விடமாட்டோம். இதில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.

புகைப்படங்களை வெளியிட்டார்

அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கொடநாட்டில் கொள்ளையடித்த கூலிப்படையினருக்கு திமுகவினர் ஜாமீன் பெற்று தந்ததாகக் குற்றம்சாட்டியதோடு, ஜாமீனில் எடுத்தவர்கள் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களையும் பொதுக்கூட்ட மேடையில் வெளியிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com