இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர் ரயில் மாறுகிறது!

இன்னும் 9.5 கி.மீ. நீளப் பாதை அமைந்துவிட்டால்  போதும்.. சென்னை புறநகர் ரயில் சேவை ஒரு சுற்றுப் பாதையாக மாறி இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக மாறிவிடும்.
இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர் ரயில் மாறுகிறது!

சென்னை: இன்னும் 9.5 கி.மீ. நீளப் பாதை அமைந்துவிட்டால்  போதும்.. சென்னை புறநகர் ரயில் சேவை ஒரு சுற்றுப் பாதையாக மாறி இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக மாறிவிடும்.

தக்கோலம் முதல் அரக்கோணம் வரையிலான அந்த 9.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்சேவை தொடங்கிவிட்டால் ஒன்றல்ல.. இரண்டல்ல சுமார் 235.5 கி.மீ. தொலைவுக்கு இந்த சுற்றுவட்ட ரயில்பாதை அமையும்.

ஜனவரி 25ம்  தேதி இப்புதிய வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பிப்ரவரி இறுதியில்  சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டால் ஒருவர் காலையில் சென்னை கடற்கரையில் (0 கி.மீ.) இருந்து பயணத்தைத் தொடங்கினால் அங்கிருந்து தாம்பரம் (28.6 கி.மீ.) வந்து - செங்கல்பட்டு (59.6 கி.மீ.) பிறகு - காஞ்சிபுரம் (95.6 கி.மீ.)  அப்படியே - அரக்கோணம் (123.5 கி.மீ.) - திருவள்ளூர் (162.3 கி.மீ.) - நேராக பெரம்பூர் (225.5 கி.மீ.) பிறகு அங்கிருந்து சென்னை கடற்கரை (232.5 கி.மீ.) வரை சென்று திரும்பலாம். முழுக்க முழுக்க ரயில் பாதை மூலம் சென்னையில் கால் வைக்காலேயே அதை சுற்றி வர முடியும்.

தற்போதைக்கு கொல்கத்தாவில்தான் இந்தியாவிலேயே மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதை உள்ளது. அதுவும் வெறும் 35 கி.மீ. அரக்கோணம் - தக்கோலம் ரயில் பாதை இணைந்துவிட்டால் இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர்ப் பாதை மாறிவிடும் என்கிறது தெற்கு ரயில்வே.

மேலும் இதன் மூலம் காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், ஒச்சேரி, திருமால்புர் பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய வசதி ஏற்பட உள்ளது. அதாவது இந்த ரயில் நிலையங்களில் இருந்து அரக்கோணத்துக்கும் ரயில் ஏறலாம். செங்கல்பட்டுக்கும் செல்லலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com