தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகள்:முதல்வர் தொடங்கி வைத்தார்

DIN


மாண்டிசோரி கல்வியை அடிப்படையாகக் கொண்ட எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளை சென்னை எழும்பூர் மாநில மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
பள்ளிக் கல்வித்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் 2,381 அங்கன்வாடி மையங்களில் முன்னோடித் திட்டமாக இது செயல்படுத்தப்படவுள்ளது. 
தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் உள்ள 52,933 குழந்தைகள் பயன்பெறும் வகையில், 32 மாவட்டங்களிலும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த 2, 381 அங்கன்வாடி மையங்கள் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிலும், முன்பருவக் கல்வி செயல்பாடுகள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையிலும் செயல்படும். அந்தக் குழந்தைகளுக்கு பாடம் கற்று கொடுத்திட பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சமக்ர சிக்ஷô அபியான் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். 
விலையில்லா பொருள்கள்: மேலும் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு, 4 இணை பள்ளிச் சீருடைகள், காலணிகள், முன்பருவக் கல்வி உபகரணங்கள் வண்ண பென்சில்கள், கிரையான்கள், மலைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு கம்பளி சட்டை, மழைக்கால பூட்ஸ் ஆகியவை தமிழக அரசால் விலையில்லாமல் வழங்கப்படும். அத்துடன் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படித்து முடித்தபின் அந்தக் குழந்தைகளுக்கு நிறைவு சான்றிதழ்களும் வழங்கப்படும். விழாவில் சேர்க்கை பெற்ற குழந்தைகளுக்கு சீருடைகள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன. 
வண்ணமயமான வகுப்பறைகள்: எழும்பூர் மாநில மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ரீ கேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி. என மூன்று வகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்புகளிலும் குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன்கள் வரையப்பட்டு வண்ணமாகக் காட்சியளிக்கின்றன. வகுப்புகளில் ஆங்கில எழுத்துகள், கல்வி உபகரணங்கள், பொம்மைகள், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு சிறிய நாற்காலி என பல பொருள்கள் இடம்பெற்றுள்ளன. 
விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வெ.சரோஜா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன், தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT